இந்தியா

இந்தியாவில் 3 லட்சத்தை தாண்டி அசுரவேகத்தில் பரவும் கொரோனா! ஒரு நாளில் மட்டும் இவ்வளவு பாதிப்பா?

Summary:

Corono affected people counts in india

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. மேலும் இதனால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை, மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனோவை  கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது ஐந்தாவது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை.

மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,502 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. அதனை தொடர்ந்து  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 332,424 ஐ எட்டியுள்ளது. மேலும் நேற்று மட்டும் கொரோனா காரணமாக 321 பேர் பலியாகி, இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 9520 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதன்படி தற்போது வரை 169,797 பேர் அதாவது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9952 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணப்படுத்தபட்டுள்ளனர்.

 


Advertisement