அடுத்த அதிர்ச்சி!! இந்தியாவில் ஆற்றின் தண்ணீரில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிப்பு!! இது மிகவும் ஆபத்தான அறிகுறி என விஞ்ஞானிகள் கவலை..

அடுத்த அதிர்ச்சி!! இந்தியாவில் ஆற்றின் தண்ணீரில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிப்பு!! இது மிகவும் ஆபத்தான அறிகுறி என விஞ்ஞானிகள் கவலை..



Corona virus found in Gujarat Saparmathi river water

குஜராத்தில் சபர்மதி ஆற்றின் தண்ணீரில் கொரோனா வைரஸ் கலந்திருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் உருமாறிய டெல்டா கொரோனா வைரஸால் கொரோனா 2 வது அலை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் பலலட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவந்தநிலையில் தற்போதுதான் அதன் தாக்கம் சற்று குறைந்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் குறைய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை விரைவில் தாக்க வாய்ப்பு இருப்பதாகவும், அது 2 வது அலையை விட மோசமானதாக இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குஜராத்தில் சபர்மதி ஆற்றின் தண்ணீரில் கொரோனா வைரஸ் கலந்திருப்பது மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.

குஜராத்தின் சபர்மதி ஆறு, சந்தோலா ஏரியிலிருந்து தண்ணீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, அதில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஐ.ஐ.டி காந்திநகர் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் பள்ளி ஆராய்ச்சியாளர்கள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

அவர்கள் நடத்திய சோதனையில், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸின் தடயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே காற்று மூலம் பரவும் கொரோனா வைரஸ் தற்போது நீரின் வழியாகவும் வைரஸ் பரவலாம் என்றும், இது மிகவும் ஆபத்தான அறிகுறி என்றும் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.