கொரோனா பாதிப்பு இருப்பதை உணர்ந்த நபர் செய்த செயல்! நெஞ்சை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!

கொரோனா பாதிப்பு இருப்பதை உணர்ந்த நபர் செய்த செயல்! நெஞ்சை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!



corona symptoms man called anbulance

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மோசமாக, பாதித்த மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. இந்தநிலையில், பெங்களூரில் ஒரு நபர் தனக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதை உணர்ந்து ஆம்புலன்சுக்கு போன் செய்து அதை சம்பவ இடத்திற்கு வர வைத்துள்ளார்.

coronaஅம்புலன்ஸ் அவர் இருக்குமிடத்திற்கு வந்ததும் ஆம்புலன்சில் அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தற்போதையநிலையில் கொரோனா அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு சென்றால் தான் தன்னையும், தன் மக்களையும் அந்த வைரஸில் இருந்து தடுக்க முடியும். அங்கு நாம் சென்றால் நம்மை தனிமை படுத்திவிடுவார்களே என்ற அச்சம் யாருக்கும் வேண்டாம்.

நமது சுகாதாரத்துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே கொரோனாவை தடுக்க பொதுமக்கள் தான் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. பெங்களூரில் ஒரு நபர் தனக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதை உணர்ந்து ஆம்புலன்சுக்கு போன் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.