இந்தியாவில் இன்று ஒருநாள் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?

இந்தியாவில் இன்று ஒருநாள் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?



corona reduced in india

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. 

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 5 லட்சத்து 95 ஆயிரத்து 660 ஆக அதிகரித்துள்ளது. 

corona

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 162 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 52 ஆயிரத்து 718 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,988 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,02,45,741 ஆக அதிகரித்துள்ளது.