பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,083-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 7 லட்சத்து 33 ஆயிரத்து 131- ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 14,808- பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தநிலையில், கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 04- லட்சத்து 09 ஆயிரத்து 160 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 137 பேர் பலியான நிலையில், கொரோனாவால் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,54,147 ஆக உயர்ந்துள்ளது.