மகிழ்ச்சியான செய்தி.! இந்தியாவில் குறைந்த கொரோனா தொற்று.!
மகிழ்ச்சியான செய்தி.! இந்தியாவில் குறைந்த கொரோனா தொற்று.!

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,635 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,07,66,245 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 94 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,54,486 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 13,423 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,48,406 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 1,63,353 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.