இந்தியா Covid-19

கொரோனா நோயாளி மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

Summary:

corona patient suicide

சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நபர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர், தான் இருந்த வார்டின் இரண்டாவது மாடியின் ஜன்னல் வழியாக கீழே குதித்ததில் அவருடைய இடது காலில் முறிவு ஏற்பட்டது. 

இதனையடுத்து , அவர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட  மன உளைச்சலால் தற்கொலை செய்ய முயன்றாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்தவர் ராகுல் குமார் என்ற இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 20-ந்தேதி உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 ராகுல் குமார்  தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் மருத்துவமனையின் 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அதே மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது நினைவுகூரத்தக்கது.


Advertisement