அதிகரிக்கிறதா கொரோனா...? ஊரடங்கு அமல்படுத்தப்படுமா...? மத்திய அரசு ஊடகங்களுக்களுக்கு சொல்வது என்ன...?!!

அதிகரிக்கிறதா கொரோனா...? ஊரடங்கு அமல்படுத்தப்படுமா...? மத்திய அரசு ஊடகங்களுக்களுக்கு சொல்வது என்ன...?!!



Corona is increasing...? Will curfew be enforced...? What does the central government say to the media...

கொரோனா வைரஸ் மீண்டும் சீனாவில் அதிகரித்து‌வருகிறது. இது உலக‌நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் பாதிக்கக்கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. 

மத்திய அரசிடம், மருத்துவ நிபுணர்கள் ஐந்து முதல் பண்ணிரெண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் மீண்டும் லாக்டவுன் செயல்படுத்தப்படுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு போடப்படும் என்றும், அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என்றும், மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக, பிரபல இந்தி செய்தி ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம், இந்த செய்தியை வதந்தி என்று கூறியுள்ளது. இது அதிகாரப்பூர்வ செய்தி அல்ல என்றும், எனவே இதுபோன்ற செய்தியை வெளியிடும் முன் தகவலை சரிபார்க்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளது.