இந்தியா Covid-19

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்..! நேற்று ஒருநாள் மட்டும் உச்சகட்டத்தை தொட்ட பாதிப்பு.!

Summary:

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன .

இந்தியாவில் கொரோனா சமீப காலமாக குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா தினசரி பாதிப்பிலும், உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. உலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உச்சகட்ட அளவில் 332,503 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 2,256 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தில் இருந்து 3 லட்சத்தை அடைய 65 நாட்கள் ஆனது. ஆனால் இந்தியாவில் ஏப்ரல் 4ஆம் தேதி ஒரு லட்சமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு 17 நாட்களில் 3 லட்சம் என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளது.


Advertisement