இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்.! பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்.! பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?


corona increased in india

உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வந்தது.

இந்தியாவில் வேகமாக குறைந்துவந்த வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona

இதுவரை இந்தியாவில் கொரோனா பாதித்த மொத்த எண்ணிக்கை 1,13,33,728 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,58,446 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 19,957 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,73,260 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 2,02,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.