இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 57,982 பேருக்கு கொரோனா தொற்று! பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 57,982 பேருக்கு கொரோனா தொற்று! பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 57,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 26,47,664 ஆக அதிகரித்து உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 941 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50,921- ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் 6,76,900- பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 19,19,843-பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.