இந்தியா Covid-19

தீபாவளி சமயத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.! ஒரே நாளில் 805 பேர் கொரோனாவால் பலி.!

Summary:

தீபாவளி சமயத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.! ஒரே நாளில் 805 பேர் கொரோனாவால் பலி.!

கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாடாய்படுத்தி விட்டது. 2020 ஜூலையில் தொடங்கிய முதல் அலை டிசம்பர் வரை நீடித்தநிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பின்னர் இரண்டாவது அலை தொடங்கி பொதுமக்களை பெரிதும் அச்சமூட்டியது. 

நாளுக்குநாள் அதிகப்படியான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி பல நாடுகளையும் கலங்க வைத்தது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிற சமயத்தில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. 

நேற்று முன் தினம் 13,451 நேற்று 16,156 என பதிவான நிலையில் இன்று 14,348 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 13,198 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனாவுக்கு 805 பேர் உயிரிழந்துள்ளனர். 


Advertisement