கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு.?

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு.?


corona increased in india

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 32,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுவரை இந்தியாவில்  மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 96,77,203 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,40,573 ஆக அதிகரித்துள்ளது. 

corona

இந்தியாவில் இன்று ஒரே நாளில்  39,109 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91,39,901 ஆக அதிகரித்துள்ளது.