இந்தியா Covid-19

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

Summary:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 77,171,723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,00,55,560 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 333 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,45,810 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 96,06,111 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு 3,03,639 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Advertisement