கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?


corona increased in india

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. 

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,01,69,118 ஆக அதிகரித்துள்ளது. 

corona

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 251 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் இந்தியாவில் கொரோனவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,47,343 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 22,274 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 97,40,108 ஆக அதிகரித்துள்ளது.