கொரோனா பத்து மடங்கு பலம் கூடிடுச்சு..! இப்ப தான் இந்தியர்கள் ரொம்ப கவனமா இருக்கணும்.!விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி காரணங்கள்...!
கொரோனா பத்து மடங்கு பலம் கூடிடுச்சு..! இப்ப தான் இந்தியர்கள் ரொம்ப கவனமா இருக்கணும்.!விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி காரணங்கள்...!

கொரோனா நோய் தொற்றில் இனிதான் இந்தியா மிகவும் கவனமுடன் செயல்படவேண்டும் என விஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸின் புதுவகையான வைரஸ் ஒன்று மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு சென்ற உணவாக உரிமையாளர் ஒருவர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் உத்தரவை மீறி வெளியே சுற்றியதால் அவர் மூலம் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த நபர் உட்பட 45 பேரை மருத்துவக்குழு கண்காணித்தபோது அதில் மூன்று பேருக்கு தற்போது உள்ள கொரோனா வைரஸை விட 10 மடங்கு வேகமாக பரவும் அளவிற்கு கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த வைரசுக்கு டி614-ஜி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பபுதுவகை வைரஸ் மரபணு மாற்றத்தால் தற்போது நடைமுறையில் இருக்கும் கொரோனா தடுப்பூசி சோதனைகள் பின்னடைவை சந்திக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் இந்தியர்கள் கொரோனாவை குறைவாக எடை போடக்கூடாது எனவும், அனைத்து நாடுகளும் ஊரடங்கை கடுமையாக பின்பற்றவேண்டும் எனவும் விஞானிகள் எச்சரித்துள்ளனர்.