தமிழகம் இந்தியா Covid-19

இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு! ஒரே மாநிலத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேலானோர் பலி!

Summary:

Corona death increased in india

கொரோனாவால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 2,649 ஆக உயர்ந்தது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 1,019 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனாவால் உலகின் பல நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. இந்த கொடூர வைரஸானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 4வது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கொடூர வைரசின் தாக்கத்தால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும், கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்துக்குள் 3,967 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளதாகவும், புதிதாக 100 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 81,970 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 2,649 ஆகவும் உயர்ந்துள்ளது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 27,524 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 10,108 பேரும், குஜராத்தில் 9,591 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 


Advertisement