ஒரே நாளில் 298 பேர் மரணம்..! மகாராஷ்டிரா மாநிலத்தை தொடர்ந்து பந்தாடும் கொரோனா..! ஒரே நாளில் 9,895 பேர் பாதிப்பு.!Corona current update in Maharashtra

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 9,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

சீனாவின் உஹான் நகரில்  தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் கொரோனாவால் பெரிய பாதிப்புகளை சந்தித்துவருகிறது.

corona

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை மஹாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 3,47,502 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரே நாளில் மட்டும் 298 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அம்மாநிலத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 12,854-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,94,253 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.