அடக்கொடுமையே.. ஒரு போலீஸ்காரர் செய்ற வேலையா இது! நைசாக என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் ஷாக் வீடியோ!!

அடக்கொடுமையே.. ஒரு போலீஸ்காரர் செய்ற வேலையா இது! நைசாக என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் ஷாக் வீடியோ!!


cop-stole-egg-in-punjab-video-viral

பஞ்சாபில் சாலையோரம்  நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டியிலிருந்து தலைமை காவலர் ஒருவர் முட்டை திருடிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம், சண்டிகர் அருகே உள்ள ஃபதேஹ்கர் சாஹிப் என்ற பகுதியில் பிரித்­பால் சிங் என்ற தலைமை காவலர், சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சாலையோரத்தில் ட்ரை சைக்கிளில் வந்த முட்டை வியாபாரி ஒருவர் வண்டியை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த காவலர் வாகனங்களை ஒழுங்குபடுத்துவது போன்று நைசாக நடந்து சென்று ட்ரை சைக்கிளில் இருந்த முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துள்ளார். 

அவர் முட்டை திருடுவதை அங்கிருந்த யாரோ வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்ட நிலையில் அது பெருமளவில் வைரலானது. அதனைத் தொடர்ந்து பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், அவரிடம் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு, பின்னர் அந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.