5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி.! சோனியா காந்தி போட்ட அதிரடி உத்தரவு.!

5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி.! சோனியா காந்தி போட்ட அதிரடி உத்தரவு.!



Congress president sonia gandhi order

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. மீதமுள்ள 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. நடந்துமுடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது.

இந்நிலையில் தேர்தல் தோல்விகுறித்து விவாதிக்க கடந்த 13-ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூடியது. அதில் காங்கிரஸின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் தேர்தல் தோல்வி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்துக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இதனையடுத்து, தேர்தலில் தோல்வியைச் சந்தித்த 5 மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். சோனியா காந்தியின் உத்தரவை தொடர்ந்து உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து கணேஷ் கொடியால் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்க்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.