பீகார் தேர்தலில் கெத்து காட்டிய ஐபிஎல் வீரர் தேஜஸ்வி யாதவ்.! அவரின் கனவை நொறுக்கிய காங்கிரஸ்.!

பீகார் தேர்தலில் கெத்து காட்டிய ஐபிஎல் வீரர் தேஜஸ்வி யாதவ்.! அவரின் கனவை நொறுக்கிய காங்கிரஸ்.!


congress low win in bihar

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்திய பீகாா் சட்டப் பேரவைத் தோதலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 

இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணிக்கும் கடும் போட்டிகள் நிலவியது.

Bihar

அங்குள்ள 243 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வென்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றது. மெகா கூட்டணி 113 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 110 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 74 இடங்களிலும், 115 தொகுதிகளில் போட்டியிட்ட நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றது.

தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்டிரிய ஜனதா தளம், பீகார் மாநிலத்திலேயே தனிப்பெரும் கட்சியாக 75  இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் ஆட்சியமைக்க முடியாமல் போனது. அதற்கு காரணம் காங்கிரஸின் வீழ்ச்சி என்றே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.