சிறை தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு: ராகுலுக்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்..!!

சிறை தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு: ராகுலுக்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்..!!



Congress leader Mallikarjeena Kharge has said that she will file an appeal in the High Court against the sentence handed down to Rahul Gandhi.

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜீன கார்கே கூறியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, மோடி என்ற பெயர் உள்ளவர்கள் என்று தொடங்கி ராகுல்காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி குறித்து ராகுல் காந்தி அவதூறு பரப்பியதாக குஜராத், சூரத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு உடனடியாக ஜாமீனும் வழக்கப்பட்டதுடன், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து, மேல்முறையீடு செய்யும் பொருட்டு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க  வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜீன கார்கே கூறியுள்ளார். அவரது வீட்டில் காங்கிரஸ் எம்.பிக்கள் கூடி விவாதித்த பின்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.