பேருந்திலிருந்து தவறிய இளைஞர்.! சூப்பர் ஹீரோவாக நடத்துனர் செய்த காரியம்.! பதைபதைக்க வைக்கும் வீடியோ!!conductor-save-youngman-who-falls-from-bus

பேருந்து நடத்துனர் ஒருவரின் துரிதமான செயலால் பயணி ஒருவர் கண்ணிமைக்கும் நொடியில் காப்பாற்றப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கேரள மாநிலத்தில் இயங்கும் பேருந்து ஒன்றில் இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார். 

கீழே விழபோன இளைஞர் 

அந்த பேருந்தில் ஏறக்குறைய 20 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அப்பொழுது இளைஞர் ஒருவர் பேருந்தில் படிக்கட்டின் நுனியில் நின்று கொண்டு நடத்துனரிடம் டிக்கெட் வாங்கியுள்ளார். அப்பொழுது  எதிர்பாராத விதமாக அந்த இளைஞர் தடுமாறி பேருந்தின் பின்புற கதவு வழியாக கீழே விழப்போகியுள்ளார்.

இதையும் படிங்க: ஒரு கையில் பாட்டில், மற்றொன்றில் சிகிரெட்; நடுரோட்டில் இளம் தம்பதி அட்டூழியம்.!

நடத்துனர் செய்த காரியம் 

உடனே அடுத்த நொடியே அருகில் நின்ற நடத்துநர் அந்த பயணியின் கையை பிடித்து அவரை பிடித்து பேருந்துக்குள் இழுத்துள்ளார். பின் உடனடியாக அந்த பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. அந்த நடத்துனர் சற்று தாமத்திருந்தாலும் அந்த இளைஞருக்கு பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: தாயுடன் நடந்து சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்; அதிர்ச்சி வீடியோ வைரல்.!!