அடேங்கப்பா... பிதாமகன் படத்திற்காக நடிகர் விக்ரம் வாங்கி சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
ஜூன் 1 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் இயங்கும்.! ரயில்வே துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு.!
ஜூன் 1 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் இயங்கும்.! ரயில்வே துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு.!

ஜூன் ஒன்றாம் தேதி முதல் 200 பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் நான்காம் முறையாக இந்த மாதம் இறுதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அண்டை மாநிலங்களில் சிக்கிய தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பும் வகையில் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் ஏசி அல்லாத 200 பயணிகள் ரயிலானது இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் வழக்கமான கால அட்டவணையில் தான் ரயில்கள் இயங்கும் என்றும், ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.