
தீராத காதுவலியால் துடித்த பெண்ணிற்கு ,பரிசோதனையில் காத்திருந்த பெரிய இடி .! திணறி போன மருத்துவர்கள் .!
காது வலியால் அவதிப்பட்டு வந்த பெண்ணின் காதுக்குள் பரிசோதனையின்போது கரப்பான்பூச்சி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களாக காது வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இந்நிலையில் காது வலி தாங்கமுடியாமல் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் எண்டோஸ்கோப்பியின் உதவியுடன் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்ட போது காதின் உட்பகுதியில் கரப்பான்பூச்சி உள்ளது கண்டறியப்பட்டது.
இதை அறிந்த அந்தப் பெண் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில் எனது காதுக்குள் கரப்பான் பூச்சி எவ்வாறு சென்றது என எனக்கு தெரியவில்லை, நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது காதுக்குள் சென்று இருக்கலாம் . இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார் .
பின்னர் மருத்துவர்கள் கரப்பான்பூச்சியை காதிலிருந்து வெளியே எடுத்தனர் மேலும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement