இந்தியா

இந்த வருடமும் பள்ளி இறுதித் தேர்வு இல்லை.! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு.!

Summary:

மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதித் தேர்வுகள் இல்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடுமுழுவதும் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தப்பட்டு வந்தது.

ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் கல்வி நிறுவனங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது.

இந்தநிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதித் தேர்வுகள் இல்லை என்றும், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் எனவும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


Advertisement