இன்னும் சற்று நேரத்தில் இந்தியா முழுவதும் ஏற்படவிருக்கும் சத்தம்! யாருக்காக? மறந்துடாதீங்க மக்களே!
சீனாவில் ஆரம்பித்த கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி, உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதை அடுத்து, இந்தியா முழுவதும் இன்று ஒருநாள் சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
During this #JantaCurfew, India shall rise to show gratitude towards our Corona Warriors by clap your hands @ 5pm today. pic.twitter.com/VL2VzGxjSx
— Vara Prasad Akula (@VaraPrasadAkul2) March 22, 2020
இந்தியாவில் பிரதமரின் வேண்டுகோளுக்கு மக்கள் அனைவரும் ஆதரவு தந்து யாரும் வீட்டை விட்டு வெளியேவராமல் வீட்டிற்குள்ளே முடங்கினர். இந்தநிலையில், நாடு முழுவதும் மக்கள், ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர்.
இந்தநிலையில், இன்று ஞாயிறு மாலை 5 மணிக்கு வீட்டிற்குள் இருந்தபடியோ அல்லது முற்றத்தில் அல்லது பால்கனியில் நின்றபடி கைதட்டி கொரோனாவை ஒழிக்கப் பாடுபடும், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைவருக்கும் மக்கள் கரவோசை எழுப்பி தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இந்தியா முழுவதும் 5 மணிக்காக காத்திருக்கின்றனர்.