BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
நாய்களுடன் சிறுவன்-சிறுமிகளுக்கு திருமணம் செய்துவைக்கும் கிராம மக்கள்.. காரணம் தெரியுமா?.!
பன்முகத்தன்மை கொண்டு இந்தியாவில் இன்றளவும் பல வினோத பழக்கங்கள் தொடர்ந்து வருகின்றன. ஒடிசாவில் இருக்கும் பந்த்சாஹி பழங்குடியின கிராமத்தில் சிறார்களுக்கும், நாய்களுக்கும் இடையே திருமணம் செய்து வைக்கும் பழக்கமானது காலம்காலமாக நடைபெற்று வருவதாக தற்போது தெரியவந்துள்ளது.

சிறுவனுக்கும், பெண் நாய்க்கும், சிறுமிக்கும், ஆண் நாய்க்கும் என திருமணம் செய்து வைக்கின்றனர். இவ்வாறு செய்யும் பட்சத்தில் அவர்களிடையே இருக்கும் தீய சக்திகள் மற்றும் தீய பழக்கங்கள் விலகி அவை நாய்க்கு செல்லும் என்று அங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.