இந்தியா லைப் ஸ்டைல்

'மனிதநேய சிறுவன்' கோழிக்குஞ்சின் உயிரை காக்க என்ன செய்தான் தெரியுமா.!

Summary:

child god - misoram - little boy - docter

மிசோரமில் சிறுவன் ஒருவன் தன் வீட்டின் அருகே சைக்கிள் ஓட்டி விளையாடும் போது எதிர்பாராதவிதமாக அவனது சைக்கிளில் சிக்கி கோழிக்குஞ்சு ஒன்று அடிபட்டு விழுந்து உள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அச்சிறுவன் என்ன செய்வதென்று அறியாது துடித்துள்ளான். உடனே தனது வீட்டிற்குள் சென்று உண்டியலில் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளான். அங்கு இருந்த மருத்துவரிடம் கோழிக் குஞ்சியின் உயிரை காப்பாற்றுமாறு  கெஞ்சியுள்ளான்.

அவனது செயலை எண்ணி வியந்த மருத்துவர் அந்த கோழிக்குஞ்சுக்கு சிகிச்சை அளித்ததோடு மட்டுமல்லாமல் அச்சிறுவனை புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இச்சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement