அரை நிர்வாணக் கோலத்தில் தாய்! உடம்பில் ஓவியம் தீட்டிய குழந்தைகள்! வைரலான வீடியோவால் வெடித்த சர்ச்சை!

Chikdren draw image in half nude mother body kerala


chikdren-draw-image-in-half-nude-mother-body-kerala

கேரளாவை சேர்ந்த பெண் செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா. சர்ச்சைகளுக்கு பெயர்போன இவர் தனது அரை நிர்வாண உடலில் தனது குழந்தைகளை ஓவியம் வரையவைத்த வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 'பாடி அண்டு பாலிடிக்ஸ்'  என்ற என்ற தலைப்பில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் பாத்திமா அரை நிர்வாண நிலையில் இருக்க, அவரது சிறுவயது மகன் மற்றும் மகள் இருவரும் அவரது உடலில் ஓவியங்கள் வரைவது போல அந்த வீடியோ இருந்துள்ளது. 

rehana fathima

மேலும் அதில் அவர், தன் அம்மாவின் உடலைப் பார்த்து வளரும் குழந்தைகள்தான் பெண்களின் உடலை அவமதிக்காது. பெண்களின் உடலைப் பற்றிய விழிப்புணர்வை  வீட்டிலிருந்தே கற்றுக் கொடுத்தால்தான் இந்த சமூகம் மாறும் எனவும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வீடியோவிற்கு  பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ்  கேரளா பத்தனம்திட்டா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாத்திமா கடந்த 2018ஆம் ஆண்டு பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், கோவிலுக்கு செல்ல முயன்று சர்ச்சையை கிளப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது