அழுகிய கோழி இறைச்சியுடன் சிக்கன் பிரியாணி விநியோகம்.‌. புதுச்சேரி பிரியாணி பிரதர்ஸ் கடையில் சம்பவம்..!Chicken Biryani in Rotten Chicken Puducherry

ஆசையாய் பிரியாணி வாங்கி சாப்பிட சென்ற வாடிக்கையாளருக்கு சிக்கனில் புழு நெளிந்ததால் பதறிப்போகினார்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வெண்ணிலா நகர், மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சார்ந்தவர் சூர்யா. இவர் 18 ஆம் தேதியான நேற்று இரவு 10:30 மணி அளவில் அங்குள்ள வள்ளலார் சாலை, காமராஜர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரியாணி பிரதர்ஸ் என்ற ஹோட்டலுக்கு சென்று சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கி இருக்கிறார். 

அதனை வீட்டிற்கு கொண்டு சென்று சாப்பிட முயற்சித்தபோது, சிக்கனிலிருந்து அழுகிய துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து அதனை சோதித்த போது சிக்கன் அழுகி இருப்பது உறுதியானது. 

India

இதனால் பிரியாணியுடன் கடைக்கு சென்று கேட்டபோது, ஊழியர்கள் உரிமையாளரின் செல்போன் நம்பரை கொடுத்து அவரிடம் தொடர்பு கொண்டு பேசிக் கொள்ளுங்கள், எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். 

உரிமையாளருக்கு தொடர்பு கொண்டு பேசுகையில் அவர் சரிவர பதில் கூறாமல் அழைப்பை துண்டித்து இருக்கிறார். இதனால் இது தொடர்பாக உணவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.