இந்தியா

இளம் பெண்ணை தேடி தினம் தினம் வந்த பீட்சா பார்சல்!! கடைசியில் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

Summary:

பெங்களூரை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு நபர் ஒருவர் தினமும் பீட்சா ஆர்டர் செய்து அனுப்பிய ச

பெங்களூரை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு நபர் ஒருவர் தினமும் பீட்சா ஆர்டர் செய்து அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் பெங்களூரு எலகங்கா நியூ டவுன் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில்,

சில நாட்களுக்கு முன்னர் முகநூலில் நபர் ஒருவர் தன்னை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்ததாகவும், தான் அதை மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் சில நாட்கள் கழித்து தனது வீடு, அலுவலகம், தான் செல்லும் இடம் என அனைத்திற்கும் தன்னை தேடி பீட்சா டெலிவரி செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.

தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறிய அந்த இளைஞர் தனக்கு போன் செய்து, நான்தான் உனக்கு பீட்சா ஆர்டர் செய்வதாகவும், தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவில்லை என்றால் இப்படி தினமும் பீட்சா ஆர்டர் செய்து உன்னை தொல்லைசெய்வேன் என கூறுவதாகவும் அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார்

மேலும், அந்த நபர் தனியார் நிறுவனம் ஒன்றின்மூலம் சில ஆட்களை நியமித்து தன்னை கவனித்துவருவதாக கூறியதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். அந்த நபரின் இதுபோன்ற செயலால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட யாரோ தன்னை தாக்க கூடும், இதனால் நான் ஒவொவ்ரு நிமிடமும் பயத்துடனே வாழ்ந்துவருகிறேன். எனவே, உடனே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.


Advertisement