"திருமணமான பெண்களை உறவில் ஏமாற்றலாம் குற்றமல்ல..." பரபரப்பு தீர்ப்பு வழங்கிய பெங்களூர் நீதிமன்றம்.!

"திருமணமான பெண்களை உறவில் ஏமாற்றலாம் குற்றமல்ல..." பரபரப்பு தீர்ப்பு வழங்கிய பெங்களூர் நீதிமன்றம்.!



cheating-on-a-married-woman-is-not-a-crime-bengalur-hig

திருமணமான பெண்ணுடன் நெருங்கி பழகி   திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் உல்லாசமாக இருந்து விட்டு  ஏமாற்றிய நபருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்  பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

பெங்களூரைச் சார்ந்த ப்ரஜித் என்ற இளைஞர்  திருமணமான பெண் ஒருவருடன் நெருங்கி பழகி இருக்கிறார். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியிருக்கிறது. அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.

India

பின்னர் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய போது ஏமாற்றி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த நபர் மீது பெண் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்த பின் பெங்களூர் உயர் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் "கணவரை விவாகரத்து செய்யாமல் இன்னொரு நபரை திருமணம் செய்ய நினைக்கும் பெண்களை ஏமாற்றுவது  குற்றம் ஆகாது" என்ற அதிர்ச்சியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது பெங்களூர் உயர்நீதிமன்றம்.