மீண்டும் பரவுகிறது கொரோனா... முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஆணையிட்ட மத்திய அரசு.. மக்களுக்கு அதிரடி உத்தரவு.!

மீண்டும் பரவுகிறது கொரோனா... முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஆணையிட்ட மத்திய அரசு.. மக்களுக்கு அதிரடி உத்தரவு.!



central-govt-says-state-govt-take-necessary-action-to-c

கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதால் முகக்கவசம் அணிய, பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகளவில் ஏற்பட்ட கொரோனா அச்சமானது குறைந்தது என நினைத்த வேலையில், கொரோனாவின் உருமாறிய பி.எஸ். 7 வகை வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதனால் சீனாவில் மீண்டும் உயிரிழப்பு, ஊரடங்கு போன்றவை நிகழ்ந்து வருகின்றன. 

சர்வதேச அளவில் மீண்டும் கொரோனா தொடர்பான அச்சம் ஏற்பட்டு இருப்பதால், விமான பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

Central Govt

அதன்படி, நேற்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடைபெற்று முடிந்த நிலையில், அக்கூட்டத்தில் மக்கள் கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியை கையில் எடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, சானிடைசர் உபயோகம் போன்றவற்றை மீண்டும் அமல்படுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, வெளிநாட்டில் இருந்து வருவோரை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.