BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் எவ்வளவு தெரியுமா?..! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்குவதாக அறிவித்த மத்திய அரசு, அதற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைப்பு பெற்றவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டருக்கு, தலா 200 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு பெற்ற 1.20 கோடி பேருக்கு மட்டும் 200 ரூபாய் மானியம் வழங்க உள்ளதாகவும், மற்றவர்களுக்கு மானியம் வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது.

ஒரு ஆண்டிற்கு 12 சிலிண்டர்கள் மட்டுமே இந்த மானியம் வழங்கப்படும் என்றும், அதற்குமேல் வாங்கும் சிலிண்டருக்கு மானியம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் நேரடியாக இந்த மானிய தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நடுத்தர குடும்ப மக்களுக்கும் வழங்க வேண்டும் என்று மக்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.