ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
5G நெட்ஒர்க் சேவைக்கு திடீர் தடை விதித்த விமான போக்குவரத்து அமைச்சகம்.. காரணம் இதுதான்..!
இந்தியாவில் நெட்ஒர்க் சேவைகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லும்பொருட்டு, 5 ஜி சேவைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அறிமுகம் செய்யப்பட்டது. முதல் தவணையாக சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் 5 ஜி சேவை வழங்கப்பட்டு, படிப்படியாக அவை நாடு முழுவதும் கொண்டு வரப்படவுள்ளது.
இதற்கான முழுவீச்சு பணிகளை செல்போன் நெட்ஒர்க் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. இதற்கிடையில், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் நெட்ஒர்க் நிறுவனங்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், விமான நிலையங்களுக்கு அருகே 5 ஜி செல்போன் டவர்களுக்கு தடை விதிப்பதாக கூறியுள்ளது.
அதாவது, 5G டவர் சேவையில் இருந்து பெறப்படும் அலைக்கற்றை, விமானம் - விமான கட்டுப்பாட்டு அறையுடன் கொண்டுள்ள தொடர்புகள் இடையே குறுக்கிட்டு தவறான தரவுகளை கண்பிடிக்க வைக்கிறது. விமானத்தின் உயரம் காட்டும் கருவியான அல்டிமீட்டர் செயல்திறனை பாதிக்கிறது.
இதனால் விமானத்தின் ஓடுபாதையில் இருந்து 2.1 கி.மீ தூரத்திற்குள் 5G நெட்ஒர்க் சேவைக்கான கோபுரங்கள் அமைக்க கூடாது. பழைய அல்டிமீட்டர் கருவிகளை மாற்றம் செய்ய விமான நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடியும் வரை 5G டவர்களை செல்போன் நிறுவனங்கள் அமைக்க கூடாது என தெரிவித்துள்ளது.