பள்ளத்தில் பாய்ந்த கார்: கோர விபத்தில் 8 பேர் பலி 3 பேர் படுகாயம்..!

பள்ளத்தில் பாய்ந்த கார்: கோர விபத்தில் 8 பேர் பலி 3 பேர் படுகாயம்..!


Car plunges into ditch 8 dead, 3 injured in freak accident

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சிங்காம் பகுதியில் இருந்து சாட்ரூ என்ற கிராம பகுதிக்கு 11 பேர் ஒரு காரில் நேற்று சென்றனர். அந்த கார் போண்டா என்ற கிராம பகுதியில் உள்ள மலைச்சாலை வழியாக சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்துக்குள் பாய்ந்தது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினருடன் இணைந்து உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மேலும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.