லிப்ஸ்டிக்கில் ரகசிய கேமரா வைத்து பெரும்புள்ளிகளை மயக்கிய பெண்கள்! பதறவைத்த 4000 வீடியோக்கள்!

லிப்ஸ்டிக்கில் ரகசிய கேமரா வைத்து பெரும்புள்ளிகளை மயக்கிய பெண்கள்! பதறவைத்த 4000 வீடியோக்கள்!


camera in lipstick


மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் பத்து நாட்களுக்கு முன்னர் ஐந்து பெண்கள் மற்றும் ஒரு ஆண் கைது செய்யப்பட்டனர். தொழிலபதிபர் ஹர்பஜன் சிங் என்பவர் இரண்டு பெண்களுடன் நான் உல்லாசமாக இருந்தேன், அதை வீடியோவாக எடுத்து அவர்கள் என்னை மிரட்டுகின்றனர் என புகார் அளித்திருந்தார்.

இதனால் பல முறை அவர்களுக்கு நான் பணம் கொடுத்துவிட்டேன். ஆனால் தற்போது  3 கோடி ரூபாய் கேட்டு என்னை மிரட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என தெரிவித்தார். இதனையடுத்து அந்த கும்பலை போலீசார் கைப்பற்றினர்.

camera

போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அமைச்சர்கள் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை பல பெரும்புள்ளிகளை மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருக்கும் போது அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து பின்னர் அதை காட்டி அவர்களை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

இந்நிலையில் அவர்களை எப்படி ரகசியாக வீடியோ எடுத்தோம் என அவர்கள் கூறுகையில், லிப்ஸ்டிக், செல்போன்கள் மற்றும் கண்ணாடிகளில் ரகசிய கேமராக்களை வைத்து இவர்கள் அந்தரங்க காட்சிகளை பதிவு செய்து, அறைகளில் கேமரா வைத்தால் உடன் இருக்கும் பெரும் புள்ளிகள் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் இப்படி நூதன முறையை கையாண்டோம் என கைதான பெண்கள்  கூறியுள்ளனர். இது தொடர்பான 4000 வீடியோக்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.