இந்தியா

பள்ளி கழிவறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்து ஆசிரியைகளுக்கு மிரட்டல்! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

camara in teacher rest room

உத்தரபிரதேசம் மீரட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியை சேர்ந்த 52 ஆசிரியர்கள் கூட்டாக காவல்துறையினரிடம் புகார். அதில் பள்ளி நிர்வாகம் தங்களை பள்ளியின் கழிவறைகளில் மறைமுகமாக எடுக்கப்பட்ட  வீடியோக்களை பயன்படுத்தி பிளாக் மெயில் செய்வதாகவும் பல மாதங்கள் சம்பளம் இல்லாமல் வேலை வாங்குவதாகவும் கூறி உள்ளனர்.

அந்த பள்ளியில் உள்ள கழிவறையில் பள்ளி நிர்வாகத்தினர் ரகசிய கேமரா பொறுத்தியுள்ளனர். பின்னர் ஆசியர்கள் கழிப்பறைக்குச் சென்றபோது அவர்களுக்கேத் தெரியாமல், சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவுசெய்திருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்துக் கொண்டு ஆசிரியர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் பள்ளியின் செயலாளர் மற்றும் அவரது மகனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், தனக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை பள்ளியின் செயலாளர் மறுத்துள்ளார். ஆனால் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பின்னடைவால்  கடந்த சில மாதங்களாக பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கத் தவறிவிட்டதாக செயலாளர் ஒப்புக்கொண்டார்.  இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement