திக்.திக் . மனைவியின் தலையை ரத்தம் சொட்ட,சொட்ட பையிலிருந்து வெளியே எடுக்கும் பதபதக்க வைக்கும் வீடியோ.!

திக்.திக் . மனைவியின் தலையை ரத்தம் சொட்ட,சொட்ட பையிலிருந்து வெளியே எடுக்கும் பதபதக்க வைக்கும் வீடியோ.!


by-wife-illegal-affairs-husband-cut-head-of-wife

மனைவியின் தலையை துண்டாக வெட்டி, தலையோடு கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் தரிகெரேயில் உள்ள ஷிவானி பகுதியில் வசித்து வருபவர் சதீஷ்.இவரது மனைவி ரூபா.

மேலும் அவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகிய நிலையில், அவர்களது வாழ்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்தது.அப்பொழுது சமீபத்தில் சதீஷ் கூர்மையான ஆயுதம் கொண்டு, தனது மனைவியின் தலையை கொடூரமாக துண்டாக வெட்டியுள்ளார்.

அதன் பின் அதை ஒரு துணிப்பையில் வைத்து எடுத்துகொண்டு அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.அப்பொழுது விசாரணையில்  எனது மனைவி ரூபா என்னை ஏமாற்றிவிட்டாள். அவள் வேறொரு நபருடன் தொடர்பு கொண்டுள்ளாள்.மேலும் தோட்டத்தில் அவனுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்தேன்.எனவே அவளது தலையை வெட்டி கொலை செய்துவிட்டேன்.ஆனால் அவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான் என்று கூறியுள்ளார்.

மேலும் மனைவியின் தலையுடன் போலீஸில் சரணடைய வந்த சதீஸை அங்கிருந்த காவலர் மொபைலில் வீடியோ எடுத்துள்ளார்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அவர் மனைவியின் தலையை கையில் எடுத்துக்காட்டும் வீடியோ பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.