இந்தியா

கொட்டித் தீர்த்த கனமழையால் குப்புற கவிழ்ந்த பேருந்து! 21 பேர் பலி, 50 பேர் படுகாயம்!

Summary:

bus accident for heavy rain


குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் நேற்று மாலை தனியாருக்கு சொந்தமான சொகுசு பேருந்து மலைப்பாங்கான சாலையில் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் நேற்று மாலை இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்றய தினம் அப்பகுதியில் கனத்த மழை பெய்துள்ளது. அந்த சமயத்தில் 70 பயணிகளுடன் பயணித்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த சுமார் 50 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த கோர விபத்து தொடர்பான தகவலறிந்த பிரதமர் மோடி அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளார். 


Advertisement