பூட்டிய வீட்டில் குழந்தைகளுடன் அண்ணன்- தம்பி எடுத்த விபரீத முடிவு! துடிதுடித்துபோன மனைவிகள்! பகீர் சம்பவம்!

Summary:

Brothers commit suicide with children inside of house

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வந்தவர்கள் சகோதர்கள் அம்ரீஷ் படேல் மற்றும் கவுரங் படேல். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் தங்களது குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியே சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

ஆனால் மறுநாள் மாலையாகியும் அவர்கள் அனைவரும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த இருவரின் மனைவியரும் உடனே தங்களுக்கு சொந்தமாக வாத்வா பகுதியில் உள்ள அவர்களது மற்றொரு வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அந்த வீடு உள்ளே பூட்டி இருந்த நிலையில், அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இதுகுறித்து அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, குழந்தைகள் 4 பேர் உட்பட, அனைவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.  அதனைத் தொடர்ந்து போலீசார்கள் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிள்ளைகள் அனைவருக்கும் மயக்க மருந்து கொடுத்து, பின்னரே  தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளனர் என  கூறப்படுகிறது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement