இந்தியா

குடிபோதையில் உடன் பிறந்த தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்! தந்தையின் கதறல்!

Summary:

Brother sexual abused his sister

குஜராத் மாநிலத்தில், குடிபோதையில் தனது சொந்த 15வயது தங்கையை பாலியல் வன்கொடுமை  செய்த அண்ணன்மீது அவரது தகப்பனார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையன்று மதுபோதையில் இருந்த அண்ணன் துாங்கிக் கொண்டிருந்த தனது சொந்த தங்கையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் எனது மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் குருங்ரம் ஃபரூக்நகரில் வசித்து வருகிறேன். எனது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டு சில வருடங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். 

இந்த நிலையில், தீபாவளி அன்று நானும் எனது மகனும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தினோம். நான் அன்றைய தினம் மிகவும் அதிகமாக மது அருந்தியதால் என்னுடைய ரூமில் துாங்கிவிட்டேன். என்னுடைய மூத்த மகளும் இளைய மகளும் ஒரு அறையில் தூங்கினர்.

அதன் பின் என்னுடன் மது அருந்திய என் மகன் தனியாக துாங்கிக் கொண்டிருந்த எனது கடைசி மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டான். இந்த சம்பவத்தை அடுத்த நாள் காலையில்தான் என் மகள் கூறினாள் என தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு, சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவனையில் சேர்த்தனர். அதில் அவள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதியானது.  

இதனையடுத்து அந்நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். உடன் பிறந்த சகோதரியை சீரழித்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement