கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்த காட்சி; சிக்கிய வாகனங்களின் கதி என்ன?

கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்த காட்சி; சிக்கிய வாகனங்களின் கதி என்ன?



bridge broken in kolakata and vehicles recued

கொல்கத்தா புறநகர் பகுதியில் தராடலா அருகே மேமின்பூர்- தராடலா இடையே ஒரு மேம்பாலம் கடந்த 1970-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் நேற்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியானார்கள். பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் உயிர்ப்பலி அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

விபத்தில் பாலத்தின் மேற்பகுதியில் சென்ற வாகனங்களும், கீழே சென்ற வாகனங்களும் சிக்கியது. இதில் 5 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேற்பகுதியிலிருந்த வாகனங்கள் உடனடியாக மீட்கப்பட்டது. கீழ்பகுதியில் சிக்கியுள்ள வாகனங்களை மீட்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநில தீயணைப்பு படை, மீட்பு குழு மற்றும் போலீஸ் மீட்பு பணியை தீவிரமாக தொடங்கியது.

 இதற்கிடையே அப்பகுதியிலே ராணுவ முகாம் உள்ளது. அங்கிருந்து மீட்பு  பணிக்கு வீரர்கள் சென்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் விபத்து நேரிட்ட பகுதி எங்கள் பகுதிக்கு மிகவும் அருகாமையில் இருந்தாலும் மீட்பு பணிக்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை, இருப்பினும் ராணுவம் மருத்துவ குழுவை அனுப்பியுள்ளது என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.