விறுவிறுப்பாக நடந்த திருமணத்தை திடீரென தடுத்து நிறுத்திய மணமகள்! அதிர்ச்சி காரணம்!

விறுவிறுப்பாக நடந்த திருமணத்தை திடீரென தடுத்து நிறுத்திய மணமகள்! அதிர்ச்சி காரணம்!


bride stopped marriage

உத்திரபிரதேச மாநிலத்தின் கான்பூர் பகுதியில், நபர் ஒருவருக்கு  இளம் பெண்ணுடன் நிச்சயம் முடிந்து கடந்த 24ம் தேதியன்று இந்திய முறைப்படி திருமணம் நடைபெற்று கொண்டிருந்துள்ளது.

இந்தநிலையில் மணமகன் மற்றும் மணமகள் மேடையில் அமர்ந்திருக்க உறவினர்களும் வந்தவண்ணம் இருந்துள்ளனர். அப்போது மணமகன் அணிந்திருந்த செஹ்ரா உயர்த்தப்படுவதை கவனித்த மணமகள் திடீரென திருமணத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

இதனை கேட்டதும் அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சியடைந்துள்ளனர். மணமகன் கருப்பாகவும், அதிக வயது கொண்டவரை போலவும் இருப்பதாக மணமகள் தெரிவித்து திருமனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

marriage

இதனையடுத்து மணமகளை இருவீட்டாரும் சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இருவீட்டாரும் ஒன்றாக அமர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டர். திருமணத்திற்காக மணமகன் வீட்டார் செய்த செலவுகள் அனைத்தையும் மணமகள் வீட்டார் கொடுக்க ஒப்புக்கொண்டதை அடுத்து, இருவீட்டாரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.