அச்சோ.. இதை எதிர்பார்க்கலையே! நெருங்கி வந்த மணமகன்! மணமகள் செய்த காரியத்தால் பேரதிர்ச்சி! வைரலாகும் வீடியோ!!

அச்சோ.. இதை எதிர்பார்க்கலையே! நெருங்கி வந்த மணமகன்! மணமகள் செய்த காரியத்தால் பேரதிர்ச்சி! வைரலாகும் வீடியோ!!


bride-slap-groom-while-wedding-video-viral

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையிலும், அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையிலும், வேதனையில் மூழ்கடிக்கும் வகையிலும் வித்தியாசமான, வினோதமான பல வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அதிலும் தற்போதெல்லாம் திருமணங்களில் நடைபெறும் கலாட்டாக்கள், சுவாரசியமான விஷயங்கள் குறித்த வீடியோக்களும் பெருமளவில் பரவி வருகிறது.

அவ்வாறு தற்போது திருமணத்தில் மாலை மாற்றும் போது மணமகள் மணமகனை அறைந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது உத்தரபிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் நூற்றுக்கணக்கான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அங்கு மணமகன் மற்றும் மணமகள் இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் சம்பிரதாயங்கள் நடைபெற்றுள்ளது. அப்போது மணமகன், மணமகளுக்கு மாலை அணிவித்துள்ளார். அப்பொழுது யாரும் எதிர்பாராத வகையில் மணமகள் மணமகனை பளார் பளாரென பலமுறை அடித்துவிட்டு அங்கிருந்து செல்கிறார். அந்த வீடியோவை பார்க்கும் போது மணப்பெண்ணுக்கு அந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்பது தெரிய வருகிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.