90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
திருமணத்திற்கு வீடியோ எடுக்க வந்தவருடன் மணப்பெண் மாயம்.!

பீகார் மாநிலத்தில் திருமணத்திற்கு வீடியோ எடுக்க வந்தவுடன் மணப்பெண் ஓடிப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் என்ற பகுதியில் லக்ஷ்மண ராய் என்பவர் தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு வீடியோ எடுக்க அதே கிராமத்தை சேர்ந்த கோலு குமார் என்பவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் மணப்பெண்ணுக்கும், வீடியோகிராஃபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் காதலாக மாறிய நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் இருவரும் ஊரை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண்ணின் பெற்றோர் வீடியோகிராபர் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் கேட்டபோது தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளனர்.
இதனையடுத்து மணப்பெண்ணின் பெற்றோர் வீடியோகிராபர் கோலு குமார் தனது மகளை கடத்தி சென்று விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஓடிப்போன இருவரையும் தேடி வருகின்றனர்.