தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
முத்தத்தால் நடந்த களேபரம்! அந்த மாதிரி காரியத்தை எப்படி அவர் செய்யலாம்.! திருமணத்தை நிறுத்திய மணமகள்.!
உத்திரபிரதேச மாநிலம் சம்பால் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 26 வயது நிறைந்த விவேக் அக்னிகோத்ரி என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு வரவேற்பு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அந்த வரவேற்பு விழாவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அப்பொழுது மணமக்கள் மேடையில் மாலை மாற்றிக் கொண்டநிலையில், திடீரென மணமகன் மணப்பெண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண் அனைவர் முன்பிலும் தனக்கு முத்தம் கொடுத்ததை அவமானமாக கருதி விழாவையே நிறுத்தியுள்ளார். பெற்றோர்கள் எவ்வளவு சமாதானப்படுத்தியும் அவர் கேட்கவில்லை.
பின்னர் இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் மேடையில் இருந்தபோது மணமகன் தகாத முறையில் தன்னை தொட்டார். நான் அதை தடுத்தேன். ஆனால் அவர் திடீரென எனக்கு முத்தம் கொடுத்து விட்டார். இவ்வளவு பேர் முன்னிலையில் அவர் அநாகரிகமாக நடந்து கொண்டது அவரது குணத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வருங்காலத்தை நினைத்து பயமாக உள்ளது. மேலும் எனது சுயமரியாதையை பற்றிய அவர் கவலைப்படவில்லை என கூறியுள்ளார்.
ஆனால் மணமகன் விவேக் அக்னி கோத்ரி, மணமகளிடம் தான் பந்தயம் கட்டியதாலே அவருக்கு மேடையில் வைத்து முத்தம் கொடுத்ததாக கூறியுள்ளார். ஆனால் மணமகள் தான்
எந்த பந்தயமும் அவரிடம் கட்டவில்லை என மறுத்துள்ளார். இது
குறித்து போலீசார் இரு தரப்பிலும் சமாதானம் செய்தனர். ஆனால் மணப்பெண் ஏற்றுகொள்ளாத நிலையில் நன்கு பேசி இதுகுறித்து பின்னர் முடிவு எடுக்கலாம் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.