இந்தியா

மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் மடியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த மணமகள்... உறவினர்கள் அதிர்ச்சி!!

Summary:

மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் மடியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த மணமகள்... உறவினர்கள் அதிர்ச்சி!!

ஆந்திர மாநிலம் மதுரவாடா பகுதியை சேர்ந்தவர் சிவாஜி. இவருக்கும் ஸ்ருஜனா  என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆந்திரா முறைப்படி திருமண நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில் சரியாக மணமகன் சடங்குகள் அனைத்தையும் முடித்து விட்டு மணமகளின் கழுத்தில் தாலி கட்ட சென்ற போது திடீரென மணமகள் மயங்கி மணமகன் சிவாஜியின் மடியில் விழுந்துள்ளார். உடனடியாக திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து மணமகளை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மணமகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஸ்ருஜனா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் மருத்துவ பரிசோதனையில் மணமகள் விஷம் அருந்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement