வாவ்!! அதிசயம்... மனிதனைப்போற்று காடு மூச்சுவிடுகிறதா?? இணையத்தில் வைரலாகும் வீடியோ..

வாவ்!! அதிசயம்... மனிதனைப்போற்று காடு மூச்சுவிடுகிறதா?? இணையத்தில் வைரலாகும் வீடியோ..


Breathing forest viral video

காடு மூச்சுவிடுவதுபோல் இருக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

Science & Nature ஏற்ற டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவில், காடு மூச்சு விடுவதுபோல் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 21 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த காட்சியில் மனிதர்கள் விட்டு விட்டு மூச்சு விடுவதுபோல் காட்டிற்குள் ஒருபகுதியில் பூமியானது சற்று மேலே எழுந்து, பின்னர் கீழே அமுங்குகிறது.

பார்ப்பதற்கு மண் மூச்சு விடுவது போல் இருக்கும் இந்த காட்சியானது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்த வீடியோவை பார்க்கும் பலரும், காடு மூச்சு விடுகிறதா என கேள்வி எழுப்ப, இதுகுறித்து விளக்கமளித்துள்ளனர் அறிவியலாளர்கள்.

அவர்கள் கூற்றுப்படி, "பலமாக காற்று அடிக்கும்போது மெலிதான வேர்களை கொண்ட நீண்ட மரங்கள் காற்றில் அசையும்போது அவை பிடித்துக்கொண்டிருக்கும் வலுவிழந்த மண் பகுதியானது மேலே எழும்பி, பின் கீழே அமுங்குவதால் பார்ப்பதற்கு அவை மூச்சு விடுவதுபோல் தோன்றுவதாக கூறியுள்ளனர்". இதோ அந்த காட்சி.. நீங்களே பாருங்கள்..